ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக, வி.கே. சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
இந்நிலையில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலா நீக்கப்பட்டதாகக் கட்சியின் நிறுவனர் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் பசும்பொனில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு வந்த சசிகலா தனது காரில் அதே கட்சியின் கொடியைப் பறக்கவிட்டபடி பயணித்தார்.

கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், காரில் அதே கட்சிக் கொடியுடன் சசிகலா சென்றது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாளை பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க உள்ள நிலையில், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




