• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சி பிரிவில் முறைகேடு..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை கண்காணிப்பாளர் குப்புசாமி தாக்கல் செய்த மனு,

நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி துறையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தேன். என்னை கடந்த ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு உரிய விசாரணை நடத்தாமல், “பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தடை விதித்தது.

உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரரைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

மனுதாரர் அலுவலகத்தின் முனைவர் ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. அவர் மீதான புகார் அடிப்படை ஆதாரம் அற்றது என தெரிய வந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கை ஆட்சி மன்ற குழுவால் அங்கீகரிக்கப்பட்டு மனு தற்போது இணைப்பு கல்லூரி ஒன்றில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.