• Fri. Oct 30th, 2026

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் சார்பில் விழிப்புணர்வு வாரப் பேரணி..,

ByS. SRIDHAR

Oct 29, 2026

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் சார்பில் நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரப் பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.10.2026) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கூ.சண்முகம் அவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர்கள் திரு.ஜவஹர் அவர்கள், திரு.பீட்டர் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 200 மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.