• Fri. Oct 30th, 2026

வாடிப்பட்டியில் ஆபாச படம் காட்டி மிரட்டிய இளைஞர் கைது..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் வயது 22 இவருக்கும் வாடிப்பட்டி தாதம்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்பு இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவிக்கு தெரியாமல் தனது அலைபேசியின் மூலம் மணிகண்டன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் இந்த நிலையில் மணிகண்டனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்த கல்லூரி மாணவி அவரை சந்திப்பதையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் மணிகண்டன் கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.