மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலராக செல்வகுமார் பணியாற்றி வந்தார் இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு இடம் மாறுதலாகி சென்ற நிலையில் இவருக்கு பதிலாக மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் பணியாற்றி வந்த பா.தேவி என்பவர் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலராக பதவி ஏற்றார்.

இவரை சுகாதார பணி ஆய்வாளர் ஜெஸ்ஸி மற்றும் இங்கு பணியாற்றும் செல்லப்பாண்டி, செல்லமணி, அசோக்குமார், சோனை, அபிதா, பூவலிங்கம், பாண்டி, பாலமுருகன், தவமணி ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்து கௌரிவித்தனர். புதிய செயல் அலுவலராக பதவியேற்ற தேவி முன்னதாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு அர்ச்சகர் சண்முகவேல் மரியாதை செய்தார்