மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாகபெய்து வரும் தொடர் கனமழை, காரணமாக இரண்டாம் போக விவசாயத்திற்கான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த பல மாதங்களாக பருவமழை பொய்த்து போனதன் காரணமாகவும், முல்லைப்பெரியாறு பாசனக் கால்வாயில் வழக்கமாக முதல் போகத்திற்கு கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் திறக்காத நிலையில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது
இதனால் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள விவசாயகுடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 50 அடி வரை உயர்ந்து உள்ளது பெரியார் அணை நீர்மட்டம் 120 அடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும்குளங்கள் மற்றும் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் இரண்டாம் போகத்திற்கான நடவு பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக கிணற்று பாசனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் சிறப்புப் பூஜைகள் செய்து, இறைவனை வழிபட்டு , நாற்று நடும் பணியைத் தொடங்கினர்.
நாற்று நடவு செய்யும் பெண்கள், குலவையிட்டும், பாரம்பரிய கிராமிய பாடல்களைப் பாடியும் நாற்று நட்டக் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த டாக்டர் அசோக் சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள தனது விவசாய நிலத்தில் கிணற்று பாசனம் மூலம் விவசாய தொழிலாளர்களைக் கொண்டு நாற்று நடும் பணிகளை தொடங்கினார். அவர் கூறுகையில்,
,

தமிழகத்தில் விலைவாசி முழுவதும் உயர்ந்துள்ளதால் உரத்தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், நெல் மூட்டைகளின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உரியதுடன் மழை நீரை முழுவதுமாக கண்மா ய்களில் தேக்கி விவசாயத்தை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார் சோழவந்தான் பகுதியில் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




