• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கணவருடனான அந்தரங்கத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா இவர்கணவருடன் முத்தமிட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷ்டன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விக்ரமுடன் கந்தசாமி,உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.


அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.