• Mon. Oct 26th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

“மழை வெள்ளத்தில் வீட்டைத் தேடி வந்த ஆமை”..,

BySeenu

Oct 26, 2026

​கோவை, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் மற்றும் ஊர்வன புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறிய அளவிலான ஆமை ஒன்றை வாலிபர் ஒருவர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், அப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

​இந்நிலையில், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரெனச் சிறிய அளவிலான ஆமை ஒன்று நுழைந்து உள்ளது. மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அல்லது நீர்நிலைகளில் இருந்து திசைமாறி அந்த ஆமை குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.
​
வீட்டிற்குள் ஆமை இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதை எந்தவிதப் பாதிப்பும் இன்றி மிகவும் கவனமாகவும் லாபகமாகவும் பிடித்தார்.
​பின்னர், இது குறித்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறைப் பணியாளர்களிடம் அந்த வாலிபர் ஆமையைச் சீராகப் பராமரித்து ஒப்படைத்தார்.