மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூ ராட்சி 2வது வார்டு குலசேகரன் கோட் டைகிராமத்தில் குலசேகர பாண்டிய மன்னன் வணங்கி வழிபாடு செய்த கோட்டை சுவர் அருகே பழமையும் பெருமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை,மகாலட்சுமி பூஜை மகா கணபதி ஹோமம்தீப தூப ஆராதனை ஆசிர்வாத திருமுறைகள் நடந்தது.இரண்டாம் நாள் காலை 8.15 மணிக்கும் , மாலை 5.30 மணிக்கும் சங்கல்பம் புண்ணியா கவாசனம் மகாலட்சுமிஹோமம்,ருத்ர ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டபல்வேறு ஹோமங்கள் செய்து ஆராதனை செய்யப்பட்டது.

மூன்றாம் நாள் காலை 8.15 மணிக்கு ஹரித்திர கணபதி பூஜைகோமாதா பூஜை மூல மந்திர ஜெபஹோமம்,காயத்ரி ஹோமம், பூரணாஹதி,மற்றும் ஆசிர்வாத திரு மறைகள் நடந்தது.பின் கடம் வலமாக புறப்பட்டு காலை 11.15 மணிக்கு காசி, ராமேஸ்வரம், பாபநாசம், அழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரினை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபி ஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் செல்லாயி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மதியம் 12 மணிக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதன் ஏற்பாடுகளை குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி கிராம கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.





