• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம்….

ByM.JEEVANANTHAM

Oct 25, 2026

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

அதனை முன்னிட்டு 19 தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது இன்று எட்டாம் கால யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் அடங்கிய கடங்களை கொண்டு சென்றனர். வேத மந்திரங்கள் முழங்க புனித நீரானது கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பக்தர்களின் வசதிக்காக டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது கலசங்களுக்கு டோன் மூலம் பூ மழை தூவப்பட்டது நிகழ்வில் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.