• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

அபாய சைரனுடன் அணிவகுத்துச் சென்ற 10 தீயணைப்பு வாகனங்களால் பரபரப்படைந்த பொதுமக்கள்….

ByK Kaliraj

Oct 25, 2026

சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக தீபாவளி சீசனை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மீட்பு பணி வாகனங்களை அனைத்தும் சுத்தம் செய்து வாழைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய வளாகத்திற்குள் உள்ள ஸ்ரீ சிவபால விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களிடையே தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 10 தீயணைப்பு வாகனங்களும் நகரின் முக்கிய சாலைகளில் ரோடு ஷோ போன்று அபாய ஒலியை (சைரன்) எழுப்பியபடி வரிசையாக அணிவகுத்து சென்ற நிகழ்வு சாலையில் சென்ற பொதுமக்களை பீதியடைய செய்தது.

தீயணைப்பு வாகனங்கள் நிலையத்தை வந்தடைந்த பின்னர்,
தீயணைப்பு வீரர்களை வரிசையாக நிற்க வைத்து கண் திருஷ்டி விலக தேங்காயுடன், தடியங்காயையும் சுற்றி உடைக்கப்பட்டது.