• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

அதிவேகமாக செல்லும்கனரக வாகனங்களை கண்டித்து சாலை மறியல்போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா தொடங்கி பாலமேடு சாலையில் கச்சைகட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் கல் உடைக்கும் ஆலைகள் கிரசர்கள் உள்ளது.இந்த கற்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் அதிவேகமாகவும் தார்ப்பாய் மூடாமலும் அடிக்கடி சென்று வருகிறது.

இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்பவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.மேலும் அந்தப் பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகளில் வேகமாக செல்லும் லாரியிலிருந்து தூசிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் குடிநீர் வரை வந்து படிந்து விடுகிறது.

இதனால் ஏராளமானவர்கள் தூசியால்ஏற்படும் ஒவ்வாமையில் சளி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால்பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக லாரி ஓட்டுனர்களிடம் பலமுறை வேகத்தை குறைத்து போகச் சொல்லி பொதுமக்கள் தெரிவித்தும் எந்த வித பயனும் இல்லை என்பதால் நேற்று காலை 8:30 மணிக்கு கச்சை கட்டி பெரியார் நகர் பஸ் நிறுத்தம் முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி மண்டல துணை தாசில்தார் மௌட் பேட்டன், வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார்,கிராம நிர்வாக அலுவலர் மவுஷாத், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது சம்பந்தமான மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க கோருவதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.