கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இலக்கிய மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் மா. இராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் புலவர் மா. இராமலிங்கம்,நூற்றாண்டு பெருமை மிக்க பி.எஸ்.ஜி.கல்வி நிறுவனங் களின் பெருமைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறனார்..
தாம் எந்த நாடுகளுக்கும் சென்றாலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் சந்திப்பதாக கூறினார்…
விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பள்ளியின் ஐந்து முன்னாள் மாணவர்களுக்கு ‘சீரார்ந்த முன்னாள் மாணவர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்படி, பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியை கே. சகுந்தலா, காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் என். தமிழ்செல்வன், மாதம்பாளையம் ப்ளூமவுண்ட் காஸ்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் சி.பி. செந்தில்குமார், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பிரிவு இயக்குநர் கே. ரமேஷ் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு மருத்துவர் முனைவர் ஏ. விநாயக பிரபு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




