“தேனி மாவட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஒன்றிணைவோம்’ என்னும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

“தேனி கம்மவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கிடையேயான நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 26 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இதில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
“இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து,

தேனி மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் A.மனிஷா அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கியக் குறிக்கோளாகும். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களிடையே இது போன்ற விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

“அனைவரும் சமம் என்ற உணர்வோடு மாணவ-மாணவிகள் இதில் பெருமளவில் பங்கேற்றனர். கம்மவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள பிற கல்லூரிகளின் சிறந்த ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

மாணவர்களை ஆர்வமுடன் கலந்துகொள்ளச் செய்த கல்லூரிகளுக்கும், இந்நிகழ்ச்சிக்குத் தேவையான வாய்ப்பை வழங்கிச் சிறப்பித்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது




