• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Oct 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மையார் பட்டி, சக்கமாள்புரம், எட்டக்காபட்டி, அலமேலு மங்கைபுரம், கஸ்தூரி ரெங்காபுரம், கீழ செல்லையாபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி இருப்பதால் சூரியகாந்தி, மக்காச்சோளம் ,எள், போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி தொடங்கிய நிலையில் அடுத்த கட்டமாக உரம் இடுதல் பணி தொடங்கும் நிலையில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் தண்ணீர் வற்றும் வரை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மையார்பட்டி விவசாயி பரந்தாமன் கூறியது
பருவமழை தாமதமாக தொடங்கியதால் விவசாய பணிகளும் தாமதமாக தொடங்கி உள்ளோம். சமூகத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பார்ட்டிகளில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

இதனால் பாசன பணியை முழுமையாக தொடர முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழைநீர் வற்றினால் உரம் இடுதல் சேதமடைத்த கால்வாய்களை சீரமைக்க முடியும் நடைபெறும் தொடர்ந்து காய்கறிப் பயிர்கள் பயிர் இடுவதற்கும் நிலங்களை தயார் படுத்த முடியும் என கூறினார்.