• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

குடங்களை சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு..,

Byp Kumar

Oct 20, 2026

திண்டுக்கல் மாநகராட்சி ஒன்றாவது வார்டு பகுதி கேகே நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் பழனி சாலை முத்தழகுப்பட்டி பிரிவில் கை குழந்தைகளுடன் காலி குடங்களை வைத்து பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குடிநீர் வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் ஆனது தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும் இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திண்டுக்கல் பழனி சாலை முத்தழகுப்பட்டி பிரிவு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.