சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நவராத்திரி கொலு விழா மற்றும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் சாத்தூர் கிருத்திகா கணேசன் அவர்களின் ஸ்ரீனிவாச பரதநாட்டிய குழு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள்.மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர்.சண்முகக்கனி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ்விழா ஒ.மேட்டுப்பட்டி இந்து மறவர் சமுதாய தலைவர் காளிராஜ் மற்றும் விருதுநகர் செண்பகலட்சுமி முத்துக்குமார்* ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.




