மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், உலக உணவு தினத்தை முன்னிட்டு வேர்ல்ட் ஃபுட் டே என்ற ஆங்கில எழுத்து வடிவில் மாணவர்கள் கைகோர்த்து, இத் தினத்தை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட மைதானத்தில் நிற்கும் காட்சி ட்ரோன் வீடியோ பதிவில் பதிவாகி உள்ளது.

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரம்மாண்ட மைதானத்தில், முதலில் வட்ட வடிவில் நின்றபின் வேர்ல்டு ஃபுட் டே என்று ஒவ்வொரு எழுத்து வடிவில், வரிசையாக கைகோர்த்து நிற்கும் ட்ரோன் காட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் (WORLD FOOD DAY ) எழுத்து வடிவில் நிற்கும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன




