• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜி பேவில் பணம் அனுப்பியதாக செல்போனை காட்டி சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள 17 அரிசி மூட்டை கடத்தல்..,

ByKalamegam Viswanathan

Oct 17, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் துரோபதி அம்மன் கோவில் வடக்கு தெருவில் மாயாண்டி 64 என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடைப்பணியாளர் அர்ஜுன் கடையை திறந்து அரிசி மூடைகள் மற்றும் பலசரக்கு மூடையை வெளியே அடுக்கி வைத்து கொண்டிருந்தனர்.

அப்பொழுதுமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கச்சைகட்டியில் மீட்டிங் நடக்க இருப்பதாகவும் இதற்கு சாப்பாடு ஏற்பாடு செய்வதற்கு 17 அரிசி முட்டைகள் தேவைப்படுவதாகவும் இதில் விநாயகா கம்பெனி உள்ள அரிசி கேட்டதாகவும் இதற்கு கடை உரிமையாளர் அந்த பிராண்ட் இல்லையென்று கூறியதின் பேரில் நவா கம்பெனிஅரிசி கேட்டுள்ளனர் இதுவும் 7 மூடை இருப்பதாக தெரிவித்துள்ளனர். வந்திருந்த ஒருவர் சமையல்காரரிடம் கேட்டு வருவதாக வெளியே சென்று போன் செய்வது போல் பாவனைசெய்து மீண்டும் கடைக்குள் வந்து இருக்கக்கூடிய அரிசி மூட்டையை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

மீதி வேறொரு பிரான்ட் அரிசி மூட்டைகளை சேர்த்து 17 மூட்டை அரிசி வாங்கியுள்ளனர் இதற்கான பணம் ரூபாய் 34,700 ஐ கடை உரிமையாளர் மாயாண்டி அரிசி மூடைகளை வாங்கியவர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு வந்திருந்த இருவர் செல்போனில் பணம் அனுப்புவதாக சொல்லி செல்போனில் இருந்து பணம் அனுப்புவது போல் பாவனை செய்துள்ளனர்.

பின்னர் கடை உரிமையாளரிடம் பணம் அனுப்பிவிட்டோம் என்று கூறி அரிசி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர் பின்னர் கடைக்காரர் தன்னுடைய செல்போனில் பணம் ஏறி இருக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால் பணம் ஏறவில்லை என்று தெரிந்துள்ளது அப்போதும் அரிசி மூடைகளை வாங்கியவர்களிடம் கேட்டதற்கு. வேறொரு பேங்க் என்பதால் பணம் லேட்டாக வரும் என்று கூறியுள்ளனர். அப்பொழுது கடைக்கு சிலர் பலசரக்கு வாங்க வந்திருந்ததால் வாடிக்கையாளர்களை கவனிக்கும் ஆர்வத்தில் மாயாண்டி பணத்தை செக் பண்ணுவதில் கவனம் செலுத்தாமல் 17 மூடை அரிசி வாங்கியவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஆட்டோவில் 17 அரிசி மூட்டையை அலங்காநல்லூருக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் என்று வாடகை பேசி கொண்டு சென்று உள்ளனர். கொண்டு செல்லும் வழியில் கொண்டையம்பட்டி என்ற கிராமத்தில் பூக்கடை அருகே நடுரோட்டில் அரிசி மூட்டை இறக்கி வையுங்கள் இங்கிருந்து நாங்கள் எடுத்துச் செல்கிறோம் என்று கூறி ஆட்டோக்காரரை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பலசரக் கடைக்கு வந்த ஆட்டோக்காரர் அழைத்துச் சென்ற ஊருக்கு மூட்டை இறக்காமல் பாதியில் இறக்கி உள்ளதாக கடைக்காரர் மாயாண்டிக்கு ஆட்டோக்காரர் தெரிவித்துள்ளார்.

இதனால் கடை உரிமையாளருக்கு சந்தேகம் வந்துள்ளது பின்னர் அரிசி வாங்கி சென்றவர்களின் மொபைல் போனுக்கு கடை உரிமையாளர் தொடர்பு கொண்ட நிலையில் அவர்களது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது தெரிந்து கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ காரை அழைத்துக் கொண்டு கொண்டையம்பட்டி சென்று விசாரித்த நிலையில் பூக்கடை அருகில் அரிசி மூடைகளை இறக்கி வைத்த இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் பின்னர் வேறொரு வாகனத்தில் அரிசி மூடைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் நூதன முறையில் 17 அரிசி மூடைகளை கடத்திச் சென்ற நபர்கள் குறித்து கடை உரிமையாளர் மாயாண்டி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் வந்து அங்கு பதிவாகி இருந்த
சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் கடைவீதியில் ஜிபேவில் பணம் அனுப்பியதாக கூறி 17 அரிசி மூடைகளை கடத்தி சென்ற சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது