• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

​தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்..,

ByAjmalkhan saleemraja

Oct 16, 2026

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், துறைசார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
​
வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்து விவசாயிகள் கேள்வி
வனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்கள். ஆனால்,

தேனி மாவட்டத்தில் எந்தெந்த மலையில் என்னென்ன மரங்கள் உள்ளன? யானை, கரடி, புலி, மான், பன்றி, முயல் போன்ற வனவிலங்குகள் எங்குெங்கு வசிக்கின்றன என்பது குறித்த முறையான கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்களை எங்களுகளுக்கு வழங்கியுள்ளீர்களா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

​மேலும் தொடர்ந்த அவர்கள்,

தேனி மாவட்டத்தில் 22 புலிகள் இருப்பதாகத் தெரிவிக்கிறீர்களே, அப்படியானால் மலைசார்ந்த கிராமங்களில் வசிக்கும் எங்களின் பாதுகாப்பும், நாங்கள் மேய்க்கும் ஆடு, மாடுகளின் பாதுகாப்பும் என்ன என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆவேசமாகக் கோரினர். மேலும்,

புலிகள் கணக்கெடுப்பு மற்றும் அவற்றின் இறப்பு விவரங்களைச் சொல்லுங்கள்

எத்தனை ஆண் புலிகள், எத்தனை பெண் புலிகள், எத்தனை குட்டிகள் உள்ளன, எத்தனை புலிகள் இறந்துள்ளன என்ற உண்மையான கணக்கை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
​
தொடர்ந்து பேசிய விவசாயிகள், ஐயா, கடமலைக்குண்டு முதல் வெள்ளிமலை ரோடு மற்றும் போடிமலை போன்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள சாலைகளைப் போட விடாமல் தடுத்து நிறுத்துபவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
​மேலும்,

கிராமப் பகுதிகளில் சிறிய கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளை (50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை) சிலர் மறித்துத் தடுத்து வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் நேரில் சென்று இந்தப் பாதைகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர்.
​
அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துக் குற்றம் சாட்டிய விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) மற்றும் சில துறை அதிகாரிகளிடம் நாங்கள் கொடுக்கும் மனுக்களை அவர்கள் முறையாகப் பரிசீலிப்பதில்லை. மாறாக, மனுக்களைக் கிடப்பில் போட்டுவிட்டு அலட்சியம் காட்டுவதோடு, சில மனுக்களை வேண்டுமென்றே மறைத்தும் விடுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர்.
​
குளத்தின் மீது பைபாஸ் சாலை அமைக்கக் கோரி நாங்கள் கொடுத்த மனு மீது பல ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை தேடிச் சென்றும் எங்கள் குறைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தங்களது வேதனையை ஆட்சியரின் முன்பு கொட்டித் தீர்த்தனர்.
​