மதுரை பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழியக்கத்தின் 9-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் தமிழியக்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி தலைமை தாங்கினார்.

தமிழாசிரியை வளர்மதி வரவேற்புரையாற்றினார். பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேகர், தமிழியக்கம் மதுரை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியும் அதனை கற்பதின் அவசியம் பற்றியும் சிறப்புரையாற்றினர்.
இணைச் செயலாளர் அபுதாகீர் மற்றும் மாநகர செயலாளர் காளிமுத்து ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். முதுகலை பட்டதாரி வேதியியல் ஆசிரியர் முரளி நன்றியுரையாற்றினார்.




