இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் தலைவர் அபிஜித் தீப்கே, செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் முன்னெடுக்கும் போராட்டத்தின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். அதேவேளையில், தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, அவை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும், இப்போராட்டத்திற்கான நிதி ஆதாரங்கள், வரவு செலவுகள், போராட்டத்தின் பின்னணியில் செயல்படுவோர் தொடர்பான விவரங்கள் குறித்து எழும் சந்தேகங்களைச் சட்டப்படி விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் உரிய சட்ட வரம்புகளுக்குள் தலையிட்டு, இப்போராட்டத்தின் பின்னணி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து விரிவான, நியாயமான விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் சட்டவிரோதச் செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியுடன் பங்கேற்குமாறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
தேசியக் கொடி நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் தியாகத்தின் அடையாளம். அதன் மாண்பைக் காக்கும் வகையில், சட்டத்திற்குட்பட்டு அனைத்து நிகழ்வுகளும் நடைபெற வேண்டும். சாதி, மதம், மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தேசத்தின் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு ஜனநாயக வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனஅரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள்.



