• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை துவக்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலர்..,

Byமுகமதி

Oct 15, 2026

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வருடம் தோறும் நடைபெறும் கலைத் திருவிழா வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 14 வகையான போட்டிகளை முதன்மைகக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் இன்று முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூட அரங்கில் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளை இன்று
துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்கேற்பதற்கு தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல மாணவர்களின் திறமைகளை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்கா வண்ணம் நடுவர்கள் மதிப்பீடு செய்து நம் மாவட்டத்தின் சார்பில் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் க.செந்தில் அனைவரையும் வரவேற்று வரவேற்று விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் தலைமை ஆசிரியர்கள் முத்துக்கருப்பன், வள்ளியப்பன், ஆறுமுகம், மாரிமுத்து, சின்னையா, வட்டாரக் கல்வி அலுவலர் அன்பழகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சின்னையா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.

கலைத் திருவிழா போட்டிகள் முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூட வளாகம் இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, நிஜாம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்றது.

இரண்டு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 1900 மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாததுரை,
கோசலை, விஜயசாந்தி, சரவணன், வீரப்பன், பரிசுத்தம் மற்றும் கலைத் திருவிழா போட்டிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.