• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் குடியிருப்பு பகுதியில் கழிப்பறையில் மலை போல் கழிவுகள் தேங்கி துர்நாற்றம்..,

ByKalamegam Viswanathan

Oct 15, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 6வது வார்டு சங்கங் கோட்டை பகுதியில் உள்ள கழிப்பறை பல மாதங்களாக குறிப்பாக ஆண்டு கணக்கில் சுத்தம் செய்யப்படாததால் கழிப்பறையில் உள்ளே மலைபோல் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசி வரும் கழிவறை அருகில் குடியிருக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். பல்வேறு காரணங்களால் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்கு அச்சப்பட்டுள்ள பொதுமக்கள் துர்நாற்றம் வீசும் கழிப்பறையை அகற்றிவிட்டு நியாய விலை கடை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளரிடம் கோரிக்கை வைத்தும் கழிப்பறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் கழிப்பறைக்கு உள்ளே பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கழிவுகள் மலை போல் உள்ளே தேங்கி கிடப்பதாக பகுதி மக்கள் ஆதங்கத்துடன் புகார் தெரிவித்துள்ளனர் துர்நாற்றம் வீசி வரும் கழிப்பறையை உடனடியாக அகற்றிவிட்டு சங்கங்கோட்டை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ள நியாயவிலைக் கடையை அதே இடத்தில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

இந்த பகுதி பெண்கள் கூறுகையில் கழிப்பறைக்கு உள்ளே செல்ல முடியவில்லை அருகிலும் குடியிருக்க முடியவில்லை. பலமுறை கழிவறை வேண்டாம் எனக் கூறியும் அதிகாரிகள் கேட்க மறுக்கிறார்கள். கழிவறை முன்பு குப்பைகளையும் மலை போல் கொட்டி விட்டு செல்கிறார்கள். மழை காலங்களில் கழிவறையில் உள்ளே இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கழிப்பறை அருகிலேயே இருப்பதால் குடியிருக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.

உடனடியாக அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுமென கூறுகின்றனர். சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும்
இந்த கழிப்பறையை பயன்படுத்த வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் கழிப்பறையை அகற்றிவிட்டு நியாய விலை கடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.