சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மதுரை மற்றும் சோழவந்தான் பகுதியில் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது

தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம், பல்வேறு நகரங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரஜினிகாந்த், மிதுன் சக்ரவர்த்தி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படும் இப்படம், சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மதுரை சோழவந்தான் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள மருது திரையரங்கில் ஜெயிலர் 2 திரைப்படம் திரையிட உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் படத்தை காண்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர், திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.

ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை வரவேற்கும் வகையில் மதுரை மாவட்ட
ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளதால், நாளை திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



