• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்…

BySeenu

Oct 14, 2026

கோவை: தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் காவல்துறையினரை கண்டித்தும் கோவையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினர் பெருமளவுக்கு வைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி விலக வலியுறுத்தியும், SIR நடைமுறையை கைவிட வேண்டும் பறிக்கப்பட்ட வாக்குரிமைகளை திரும்ப வழங்கிட வேண்டும் இது குறித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் இளைஞர்களை கெடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய வழக்குரைஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி பாஜக அரசை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்தும் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.