• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய பொறுப்பற்ற செயல்..,

BySeenu

Oct 14, 2026

​ கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும், தனது உயிரைப் பణயம் வைத்தும் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் (Bike Stunt) ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் லைக்ஸ்கள் மற்றும் பார்வைகளைப் பெறுவதற்காக இதுபோன்று ஆபத்தான முறையில் பைக் சாகசங்கள் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கிணத்துக்கடவு மேம்பாலத்தில் அதிவேகமாகவும், கட்டுப்பாடு இன்றி மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாகசக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

​இது போன்ற பொறுப்பற்ற சாகசச் செயல்கள் வாகன ஓட்டியின் சொந்த உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.
​
இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான டிரெண்டுகளைப் பின்பற்றித் தங்களது விலைமதிப்பற்ற வாழ்க்கையைச் சூறையாடிக்கொள்ள வேண்டாம் எனப் போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் தொடர்ந்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகும் இத்தகைய வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சாகசக்காரர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.