• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வின்னகுடி கிராமத்தில் அம்மச்சி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

ByP.Thangapandi

Oct 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடியில் அருள்மிகு அம்மச்சி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா முன்னிட்டு சிலை எடுக்கும் நிகழ்வு விமர்சியாக நடைபெற்றது.,

இந்நிலையில் வின்னகுடி கிராமத்தின் எல்லையில் கிராம பொதுமக்கள் கருப்பசாமி, அய்யனார் சாமி,குதிரை வாகனம், கன்னிமார் சாமி உள்ளிட்ட சிலைளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டனர்.,

மேலும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அம்மனை தரிசிப்பதால் விவசாயம் செழிப்படையும் எனவும், கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இத்திரு விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் விரதம் இருந்து
சாமி தரிசனம் செய்தனர்.,