• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தவெக அரசு பழிவாங்கும் நோக்கில் கைது செய்வதாக முன்னாள் மண்டலத்தலைவரின் கணவர் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரியவந்தது.

இந்த வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மற்றும் நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு தலைவர்கள் ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர்கள், உதவி ஆணையாளர் என மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் மண்டலத்தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துசென்றனர்.

காலை 8 மணி முதல் 7 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துசென்றனர்.

முன்னாள் மண்டலத்தலைவரை கைது செய்து அழைத்து சென்றபோது வாகனத்தில் ஏற்றும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு்- தள்ளுமுள்ளு

புதூர் மருத்துவமனை ஒன்றிற்கு சொத்துவரி குறைவாக போடப்பட்டது தொடர்பான புகாரில் கைது செய்தனர்.