• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் ஆய்வு..,

ByP.Thangapandi

Oct 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் உபகரணங்களை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் பயன்பாடுகளை கேட்டறிந்தார்.,

மேலும் விசவாயுக்கள் தாக்கும் போது தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை ஆய்வு செய்தார்.,

தொடர்ந்து பேரிடர் காலங்களில் என்ன உபகரணங்கள் தேவையாக உள்ளது என கேட்டறிந்த நிலையில் மரங்களை அறுவை செய்வதற்கு பெரிய மரம் அறுக்கும் இயந்திரம், கிணற்றில் தவறி விழும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை மீட்பதற்கு கயிறுகள் மற்றும் குறுகலான தெருக்களில் செல்வதற்கு சிறிய ரக வாகனம் தேவைப்படுவதாக சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமாரிடம் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.,

தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு கடின உழைப்பு மற்றும் பங்களிப்பு உள்ளது அதற்கு பாராட்டுகளை தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.,

இதில் வருவாய் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர்.,