• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை..,

Byp Kumar

Oct 13, 2026

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு ராஜலட்சுமி நகர் பகுதியானது திண்டுக்கல் நத்தம் சாலை மேம்பாலத்திற்கு அருகே இருக்கக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் நத்தம் சாலையிலிருந்து வேடப்பட்டி, பாரதிபுரம் ,நாகல் நகர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக மாநகராட்சியால் சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிலைகுலைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிநீரை இரு வேறு இடங்களுக்கு பிரித்து கொடுக்கும் குடிநீர் வாழ்வு திறக்கும் தொட்டியானது சேதம் அடைந்துள்ளதால் குடிநீர் வீணாவது மட்டுமின்றி சேதம் அடைந்துள்ள தொட்டியால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சாலை மற்றும் குடிநீர் வாழ்வு தொட்டியை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.