• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மன்னம்பந்தல் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டம் மற்றும் பட்டயம் படித்த, 18 முதல் 35 வயதுடைய 1865 ஆண்கள் மற்றும் 2430 பெண்கள் இருபாளர்களும் மொத்தம் 4295 வேலை தேடுபவர்கள் பதிவு செய்து கொண்டு முகாமில் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் நேர்காணல்களில் பங்கேற்றனர்.


மொத்தம் 611 பேருக்கு பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டு கல்வி தகுதி, பணி அனுபவம் போன்றவைகளை பொறுத்து நேர்கணல் வாயிலாகவும், பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் . பன்னீர்செல்வம், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.