• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கண்ணகிக்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 5, 2026

திருப்பரங்குன்றம் தனியார் மண்ட பத்தில் ஆயிர வைசிய நடு மண்டல சோமிய செட்டியார் மகாஜன சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

|மதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிர வைசிய நடுமண்டல சோழிய செட்டியார் மகாஜன சங்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில்துணைச்சியாளர் பூர்ண லிங்கம் வரவேற்புரை கூறினnர் துணைத் தலைவர்கள் பர்மா முருகன் சுரேஷ்குமார் வரவேற்புரையும் செயலாளர் திருப்பதி பொருளாளர் பாண்டி தலைவராக முத்து குமரர் தேர்வு செய்யப்படனர்.பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில்

வைசிய குல பெண் கற்புக்கரசி கண்ணகி கோவலனுடன் மதுரை வந்தபோது பாண்டிய மன்னனால் கோவலன் பொட்டலில் கொல்லப்பட்டதால் அங்கு கண்ணகிக்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை

தங்களது சமூகத்திற்கு சோழிய செட்டியார் சாத செட்டியார் என சான்றிதழ் வழங்கப்படுவதை மாற்றி நடுமண்டல செட்டியார் என வழங்க கோரியும்

நடுமண்டல செட்டியார் என்றபெயரில் சான்றிதழ் வழங்கும்போது (MBC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வழங்க கோரியும்

உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மதுரை ஆயிர வைசிய நடுமண்டல சோழிய செட்டி மகாஜன சங்க பொதுக்குழு கூட்டத்தில் தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.