மதுரை மாநகராட்சி வார்டு எண் 90 இல் வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பசும்பொன் தெரு, பெத்தநாச்சி தெரு,கவி விநாயகர் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொகுதி அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோருக்குபல்வேறு முறை புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் இன்று சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரில் நேற்று நடந்த போராட்டத்தை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 90 வது வார்டு பகுதிகளான துளசிராம் தெரு, பசும்பொன் குறுக்கு தெரு,கவி விநாயகர் கோவில் தெரு, பெத்தனாட்சிதெரு ,சித்தி விநாயகர் தெரு ,உள்ளிட்ட இன்னும் சில தெருக்களில் சாலை வசதி பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 15 வருடங்களாக கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும். மழைக்காலங்களில் மேடு பள்ளமாக இருக்கும் இந்த சாலைகளை கடக்க முடியாமல் வயதானவர்கள் பள்ளி குழந்தைகள் கீழே விழுந்து விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

அருகிலேயே தனியார் பள்ளி இயங்கி வருகிறது, மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி குளம் போல் நிற்பதால் டெங்கு கொசு தொல்லைகள் அதிகரித்துள்ளன ,
இதனால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவி பாதிப்படைகிறோம்.
இதுவரை அரசோ அரசு அதிகாரிகளோ என யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை ஓட்டு கிடைத்து விட்டால் போதும் என்று சென்று விடுகிறார்கள். ஓட்டு கேட்க வருவதோடு சரி அதன் பின்பு யாரும் இந்த பக்கம் வருவதில்லை,
பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முதல்வர், இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சாலையோர வாய்க்கால்களில் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்பதால் அதிக கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்ய வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.




