• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி…,

BySeenu

Oct 1, 2026

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். அங்கு அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும், தாராபுரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நல்ல செய்திகளாகவே உள்ளன, மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.

பாஜகவின் கிளையாக திமுக மாறிவிட்டதாக நேற்று தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நேற்று அவரது பேச்சில் தடுமாற்றம் இருந்தது என்றும், முதலமைச்சருக்கு தடுமாற்றம் வந்துள்ளது; எதை எவ்வாறு கூற வேண்டும் என்பதே தெரியவில்லை. தடுமாற்றம்தான் பெரிய மாற்றமாக அவருக்கு அமையும் என்று தெரிவித்தார்.

இதைச் செய்துள்ளோம், அதைச் செய்துள்ளோம் என்று தவெக வினர் பட்டியல் போடுகிறார்கள். ஆனால் மகளிருக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டதா? அனைத்து முதலமைச்சர்களும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கோப்புகளில் கையெழுத்திடுவார்கள். நீங்கள் எந்தக் கோப்பில் கையெழுத்திட்டீர்கள்? நீங்கள் என்னதான் செய்துள்ளீர்கள்? என்று கேள்விகளை எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது, பால் விலை உயர்ந்துள்ளது, பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று பட்டியலிட்ட அவர், இப்படியே சென்றுகொண்டிருந்தால் இன்னும் நான்கு மாதங்களில் தமிழகத்தில் குடிப்பதற்குக்கூட பால் கிடைக்காது; குழந்தைகளுக்கும் பால் கிடைக்காது. இதுதான் அவர்களுடைய நிர்வாகம் என்று விமர்சித்தார்.

முதலமைச்சர் எதையோ செய்ய நினைத்து எதையோ செய்துகொண்டிருக்கிறார் என்றும், அவர் பேச வந்தது ஒன்று, நினைத்தது ஒன்று, ஆனால் தற்போது நடந்துகொண்டிருப்பது ஒன்று. இதுதான் தேர்தலின் முடிவாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

170 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி சுனித்துக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் செங்கோல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது தொடர்பான கேள்விக்கு, அது நல்ல விஷயம்தான் என்றும், அது மிகப்பெரிய வரலாறு என்றும் தெரிவித்தார். தமிழரின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்திலும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ரஷ்ய அதிபர் புதின் வரும்போதுகூட திருக்குறளைத்தான் பரிசாக அளித்துள்ளோம் என்றும், பிரிக்ஸ் மாநாட்டிலும் பரிசாக திருக்குறள்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அப்படி என்றால் நமது தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது பிரதமர் எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார், அன்பு செலுத்துகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஓம் காளி என்ற வார்த்தைகளை தற்போது அரசியல் தலைவர்கள் பிரச்சாரங்களில் குறிப்பிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சனாதன தர்மம் என்பது என்ன என்று பாதிப் பேருக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது இந்து மதம் குறித்து பேசிக்கொண்டே இருந்த திமுக தற்போது ஆட்சியிலேயே இல்லை. அப்படி இருக்கும்போது விஜய், “ஓம் சக்தி, பராசக்தி; நாங்கள்தான் தூய சக்தி” என்று குறிப்பிடுகிறார். தீய சக்தி திமுக என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்றால், யார் தீய சக்தி, யார் நல்ல சக்தி என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்தார்.

தவெக பணம் பட்டுவாடா செய்வதாக, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார் .