• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

லட்சுமி தீர்த்த குளமானது புல்கள் வளரும் இடமாக உருமாறி வருகிறது..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில்25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமிதீர்த்த குளம் அமைந்துள்ளது.புராண வரலாற்று காலத்தில்தெய்வானை அம்பாளுக்காக இந்த தீர்த்த குளமானது உருவாக்கப்பட்டதாக செவிவழிசெய்தி கூறுகிறது.

முன்னோர்காலத்தில் இந்த குளம்வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்து வந்துள்ளது.கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் லெட்சுமி தீர்த்த குளத்துக்கு வந்துகுளத்தில் உள்ள தண்ணீரை தங்களது கைகளில் அள்ளி கண்களில் ஒற்றிக் கொண்டும், தலையில்தெளித்தும்,கை கால்களை அழம்பி பிறகே கோவில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவந்துள்ளனர்.மேலும் கோவிலுக்கு வrரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கிபோட்டு மகிழ்ந்துவந்துள்ளனர்.

குறிப்பாக தேமல், பருஉள்ளவர்கள் இந்த குளத்தில்உப்பு,மிளகு வாங்கி போட்டால் நோய் குணமாகிவிடும்.. ஆகவே இந்த குளத்தை புண்ணிய புனித தீர்த்த குளமாகபோற்றி பாதுகாத்து வந்தனர், ரூ.6.50 கோடியில்புனரமைப்பு இத்தகைய லெட்சுமி தீர்த்த குளத்தின்சுற்றுச் சுவரானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புஅடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்துவிழுந்து சேதமானது. மேலும் குளத்தில் தண்ணீர் வற்றியது. இதனால் தீர்த்தகுளத்தை புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையொட்டி ரூ 6. கோடியே 50 லட்சத்தில்பழமை மாறாமல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3 பக்கமும் கற்களை கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் காங்கிரிட்டிலான சுவரும் கட்டுவதுஎன்று கோவில் நிர்வாகம் தீர்மானித்தது.

அதன் படியே கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பூமி பூஜையுடன் புனரமைப்பு பணியைதொடங்கியது. மேலும் 2 ஆண்டுகளாக பணி நடந்தது. இதனையடுத்து கடந்த2025 ஆண்டில் ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கானொளி மூலமாக அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லெட்சுமி தீர்த்த குளத்தை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் லட்சுமி தீர்த்த குளத்தில் தெளிந்த நீர் நிரப்பபடும் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படும் பாசி படாதவாறு முறையாக பராமரிக்கப்படும் என்று பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நடக்கவில்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் தீர்த்த குளத்திற்குள் புல் வளர்ந்தது அதை வேரோடு அகற்றாமல் மேலோட்டமாக புல்லைஅறுவடை செய்தனர். இதேதொடர்ந்து பராமரிக்காத நிலையே தொடர்ந்தது தற்போது லட்சுமி தீர்த்த குளத்தின் உள் பகுதி முழுவதுமாக பச்சை பசேரென்று புல்கள் வளர்ந்து புதர் போல மண்டி உள்ளது.

இதை போர் கால அடிப்படையில் 50 முதல் 100 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு இருந்து வேரோடு அகற்றுவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்கோவில் நிர்வாகம் முன்வரவில்லை இந்த நிலையில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதை சமூக ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளது அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.