தாராபுரம் செல்லுவதற்காக விமான மார்க்கமாக கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

தமிழகத்தில் இடைதேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில்,
தாராபுரம் பகுதியில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தாராபுரம் இடைதேர்தலில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை ஆதரித்து, வாக்கு சேகரிப்பதற்காக தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் இருந்து விமான மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில், இருந்து சாலை மார்க்கமாக அவர் தாராபுரம் புறப்பட்டு சென்றார்.

கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலரும் சால்வைகள் அணிவித்தும், மலர் கொத்து அளித்தும், வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருடன் அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அனைவரது வரவேற்பையும் ஏற்றுக்கொண்ட புஸ்ஸி ஆனந்த் காரில் ஏறி அமர்ந்தபடி கைகளை அசைத்து, விடை பெற்று சென்றார். முன்னதாக செய்தியாளர்கள் அவரை கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல் விடைபெற்று சென்றார் புஸ்ஸி ஆனந்த்.




