• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று உதயசூரியனுக்கு வாக்களித்தார் விஜய்..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கு தனி பெரும் பான்மை கிடைக்காத காணத்தால். கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்த தவெக,
இரட்டை இலையில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி, தவெக கட்சியில் இணைத்துக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, வாக்களித்த மக்களின் விரல்மை ஈரம்காயம் முன்பாக 10 நாட்களில் ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கின்ற ஒரு நம்பிக்கை துரோகத்தை, பச்சை துரோகத்தை, பட்டவத்தமாக செய்ததை நியாயப்படுத்துகின்ற வகையில் நேற்றைய தினம் முதல்வர் விஜய் திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொன்னார். அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை கையிலே எடுத்திருக்கிறார்கள்.

மதுராந்தகம் பிரச்சார கூட்டத்தில் திமுகவை எதிர்த்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய கட்சியை திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதால், எங்கள் கட்சியிலே வந்து மரகத குமரவேல் சேர்ந்தார் என்று பகிரங்கமாக நடைபெற்ற குதிரை பேரத்தை தனக்கு தனி பெருபான்மை கொண்டுவர வேண்டும், கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பிவிட வேண்டும் என்ற அவருடைய ரகசிய திட்டத்தை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, கோயபல்ஸ் பிரச்சாரத்தின் உச்சமாக முதல்வர் விஜய் பேசியதை பார்க்கின்ற போது, முதல்வர் விஜய்க்கு இந்த இடைத்தேர்தலில்தோல்வி பயம் வந்துவிட்டதை அவருடைய மதுராந்தகம் பேச்சு பட்டவத்தமாக வெளி காட்டியிருக்கிறது.

புரட்சித் தலைவி அம்மாவிற்கு தான் வாரிசு என அடையாளப்படுத்தும் என அற்ப அரசியலை கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலமாக தொடர்ந்து செய்து வருகிறார் முதல்வர் விஜய் . அதன் மூலமாக அதிமுகவை அழிக்க முயல்கிறார், முதல்வர் விஜயின் ஆசை வார்த்தைக்கு முதல்வர் விஜயின் ஆசை வார்த்தையை நம்பி, பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும், ஆளுங்கட்சியின் செல்வாக்கிற்காக ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் தங்களுக்கு பல்லாக்கு தூக்குவதற்கு தற்போது உங்கள் கட்சிக்கு வரலாம்.

ஆனால் இன்றைக்கு திமுகவிடம் ஒரு ரகசிய உடன்பாடு யார் வைத்திருப்பது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று உதயசூரியனுக்கு வாக்களித்த நீங்கள், இரண்டு வருடத்திலே கட்சியை துவங்கி, இந்த நிமிடம் வரை ஸ்வீட் அங்கிள் என்று ஸ்டாலினை நீங்கள் புகழ் பாடுவதை இன்றைக்கு எப்படி எடுத்துக்கொள்வது,ஆகவே ஸ்வீட் அங்கிள் ஸ்டாலின் என்று நீங்கள் சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்,

ஆனால் இன்றைக்கு 54 ஆண்டு காலம் திமுகவின்குடும்ப ஆட்சியை தோலூரித்து காட்டுகின்ற வகையில் உழைத்து வருகின்ற அதிமுக தொண்டர்களின் நெஞ்சிலே வேல் பாய்ச்சுகின்ற வகையில், ஒரு கோயபல்ஸ்பிரச்சாரத்தை நீங்கள் கையிலே எடுத்திருப்பது ஆண்டவனுக்கே பொறுக்காது.

நீங்கள் பேசினால், அதை எந்த வகையில் இன்றைக்கு நியாயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் தீய சக்தி திமுக என்று சொல்லுகிறீர்கள், ஆனால் ஸ்வீட் அங்கிள் என்று சொல்லுகிறீர்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் என்றைக்கும் திமுக தலைவர்களை ஸ்வீட் அங்கிள் என்று என்றைக்கும் பேசியதில்லை.

ஆனால் நீங்கள் தன்னை எம்ஜிஆர் ஆகவும், அம்மாவாகவும் நீங்கள் அடையாளப்படுத்துகிற அற்ப அரசியலை கையில் எடுத்துக்கிற இந்த முரண்பாடு அதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புரியாதது ஒன்றுமல்ல. ஒரு சில சுயநலவாதிகள் வேண்டுமானால், ஓடுகாலிகள் வேண்டுமானால், நீங்கள் தருகின்ற அந்த எலும்பு தூண்டுக்கு ஆசைப்பட்டு, உங்களிடத்திலே ஓடுகாலிகள் வேண்டுமானால் ஓடி வரலாம். எலும்பை தூக்கிட்டு யார் ஓடுவார்கள், யார் ஆசைப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் தூக்கி எறிகிற பதவி ஆசை என்கிற எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஓடி வருகிற ஓடுகாலிகளை நம்பி, அதிமுக தொண்டர்கள் யாரும் ஒருவரும் இல்லை. மக்களும் இல்லை.

ஆகவே இன்றைக்கு நீங்கள் தனி பெரும்பான்மைக்காக நீங்கள் எந்தெந்த குறுக்கு வழிகளிலே கையாள வேண்டுமோ, அதையெல்லாம் கையாண்டீர்கள். குதிரை பேரத்தை கையிலே எடுத்து, நீங்கள் செய்து வருகிறீர்கள். ஆட்சி அதிகாரத்தை நீங்கள் இழக்கிற போதுதான், உங்களை விட்டுவிட்டு முதலிலே ஓடுபவர்கள் இப்போது உங்களிடத்திலே தஞ்சம் புகுந்திருக்கிற அடைக்கலம் வந்திருக்கிற ஓடுகாலிகள் என்பதை மட்டும் உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக்கொண்டு,

இவர்கள் வருவதெல்லாம் உங்களுக்கு விசுவாசத்தை காட்ட அல்ல, உங்கள் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக, உங்கள் அதிகாரம் பறி போனால் அடுத்த நொடி உங்களிடத்திலிருந்து ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டை விட, மிக வேகமாக ஓடுகிற ஓடுகாலிகள் தான் இப்போது உங்களிடத்தில் அடைக்கலமாகி இருப்பவர்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறேன்

வாழ்ந்தாலும் ,வீழ்ந்தாலும் ,உயிரே போனாலும் அதிமுகவின் சாமானிய தொண்டனாக உயிர் மூச்சு உள்ளவரை உழைப்பது ஒன்றைத் தவிர விசுவாச தொண்டர்களுக்கு வேறு பாதையை கிடையாது.பட்டம், அதிகாரம் ஆட்சி செல்வாக்கு இதைப்பற்றி எல்லாம் அதிமுக விசுவாச கடைக்கோடி தொண்டர்கள் ஒரு நாளும் நினைத்துப் பார்த்தது கிடையாது.

இன்றைக்கு நீங்கள் நான்கு மாதத்தில் 40,000 கோடியை இன்றைக்கு தவெக அரசு கடன் வாங்கி உள்ளதை முதல்வர் விஜய் மதுராந்தகம் கூட்டத்திலே தேர்தல் பரப்புரையில் ஒரு புதிய விளக்கத்தை தந்திருக்கிறார்கள். விஜயையும் கடன் வாங்குகிறார் என்று சொல்லுகிறார்கள். ஆனால் கொள்ளை அடிப்பதற்கு நான் கடன் வாங்கவில்லை. மக்களுக்கு நலன் செய்வதற்காக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே கடன் வாங்குகிறேன் என்று சொல்கிறார்.

யார் ஆட்சியிலே இருந்தாலும், மக்களுக்காகத்தான் கடன் வாங்குவார் தவிர, வேறு ஒன்று அதற்கு தனிப்பட்ட காரணம் இருப்பதாக மக்களுக்கும் தெரியும்.

கடந்த காலங்களில் தவெக கட்சி தலைவராக இருக்கிறபோது, கடந்த கால அரசுகள் வாங்கிய கடனை நீங்கள் குற்றம் சாட்டி பேசினீர்கள் அந்த விஜய் எங்கே மறைந்து போனார், இப்போது முதல்வர் விஜய் கடன் வாங்குவதற்கு அரசியல் விஞ்ஞானியாக ஒரு பெரிய விளக்கத்தை தந்திருப்பதை பார்க்கிறபோது, தேர்தலுக்கு முன்பு விஜயின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது 100% பொய்த்து போய்விட்டது என்பதை இடைத்தேர்தல் களத்தில் நம்மால் மக்களிடத்தில் அவர்கள் வெளிகாட்டுகிற அந்த உணர்வால் உணர முடிகிறது.

இன்றைக்கு கோயபல்ஸ் பிரச்சாரத்தால் தன்னுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிற ,குதிரை பேரத்தை நியாயப்படுத்துகிற, ஜனநாயக படுகொலையை நியாயப்படுத்துகிற முதல்வர் விஜய்க்கு நிச்சயமாக உறுதியாக ஜனநாயகத்தின் வலிமையை மக்கள் புரிய வைப்பார்கள்.

இந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரட்டை இலையில் மக்கள் வாக்களிப்பார்கள் . மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு மக்கள் இன்றைக்கு விஜய் மாயபிம்பத்தை உணர்ந்திருக்கிறார்கள். விஜய் கோயபல்ஸ் பிரச்சாரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாக இடை தேர்தலில் வெற்றி தீர்ப்பு அமையும். இரட்டை இலைக்கு சாதகமாக அலை வீசுவதை நாம் பார்க்கிறோம் என கூறினார்.