• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இந்த நான்கு மாதங்களில் எந்தத் திட்டமும் முழு வடிவத்தில் செயல்படுத்தியதாக தெரியவில்லை..,

ByKalamegam Viswanathan

Sep 25, 2026

தமிழகம் முழுவதும் தற்போது செயல்படுத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பணிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம், தற்போது தவெக அரசில் இத்திட்டத்தினை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக முதல்வர் விஜய் வெகு விமர்சியாக தொடங்கி வைத்தார்கள்.

ஆனால் தொடக்க விழாவின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது. ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிடப்பட்டது, இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கோட்டையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலே சுற்றுவட்டார கிராமப் பிள்ளைகள் 54 பேர்கள் பயின்று வருகிறார்கள்.

வழக்கம் போல நேற்று காலை 8:30 மணிக்கு மேல் மாணவ மாணவிகளுக்கு கோதுமை ரவா கிச்சடியும், சாம்பாரும் காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது ரவா கிச்சடியில் பல்லி இருந்ததால், காலை உணவு சாப்பிட்ட 40 மாணவ மாணவிகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலே சேர்த்திருக்கிறார்கள்.

அங்கே 18 மாணவ மாணவிகளுக்கு தீவிர சிகிச்சையும், மற்ற மாணவ மாணவிகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இது எதைக் காட்டுகிறது? தவெகஅரசு அவசர கோலத்தில் அள்ளி தெளிக்கின்ற இந்த காலை உணவு திட்டத்திற்கு விரிவாக்க திட்டத்திற்கு உரிய கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்யாமல், உரிய வேலையாட்கள், உரிய அதிகாரிகள் இவையெல்லாம் நியமிக்கப்படாமல், அவசரக்கதியிலே அள்ளித் தெளித்த கதையாக தற்காலிக ஊழியர்களை வைத்து அலட்சியமாக இந்த திட்டத்தை செயல்படுத்துகிற காரணத்தால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த 4 மாத காலத்தில் தவெக அரசு எந்தவிதமான ஆலோசனைகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல்,
திடீரென்று அறிவிப்புகளை வெளியிடுவதால் தவேக அரசின் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக இருக்கிறது தவிர அது செயல்பாடு இருக்கு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் இல்லை.

இந்த நான்கு மாதங்களில் எந்தத் திட்டமும் முழு வடிவத்தில் செயல்படுத்தியதாக தெரியவில்லை அறிவித்திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது மக்கள் எதிர்ப்பு வலுக்கின்ற போது அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்குவதுதான் தவெகஅரசின் வாடிக்கையாக உள்ளது.இப்போது கூட தலைமைச் செயலகம் அறிவித்தது ஆனால் அந்த பகுதி மக்களிடத்தில் ஆலோசனைகளோ, கலந்தாய்வோ நடத்தாமல் தொலைநோக்கு திட்டத்தை எப்படி அறிவிப்பது இது எதை காட்டுகிறது

மக்கள் மீது அக்கறை கொண்டு திட்டங்களை அறிவித்தாலும்
முதலமைச்சருக்கு அனுபவம் இல்லாத காரணத்தால், ஆளுமை இல்லாத காரணத்தால் ,தலைமை பண்பு இல்லாத காரணத்தால், எடுத்தேன் கவிழ்த்தேன் என திட்டங்களை அறிவிப்பதும், பிறகு அதை செயல்படுத்தும் போது வருகின்ற சிக்கல்களை சரி செய்யாமல் ஓட்டம் எடுப்பதும் ஆளுமைக்கு சரியான இலக்கணமாக அமையாது

முதல்வர் விஜய் வாய்க்கு வந்ததை அதிரடி அறிவிப்பாக வெளியிட்டு, பிறகு அந்த திட்டங்களில் சிக்கல் வருகிற போது அதில் இருந்து ஓட்டம் பிடிப்பதும் பின்வாங்குவதும் அரசின் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் . இதனால் தவெகவின் சிறத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது இதற்கு தீர்வு காணுவதற்கு இன்றைக்கு தாராபுரம் ,மதுராந்தரத்தில் இரட்டை இலையை வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் தவெக அரசு கடிவாளம் இல்லாதல் தறி கெட்டு ஓடி கொண்டு இருக்கிறது அவர்களை கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார்கள் மக்கள்தான் இறுதி எஜமானர்கள் .மக்கள் நினைத்தால் அரசனை ஆண்டியாக்குவதும் ,ஆண்டியை அரசனாகுவதும் மக்கள் கையில் உள்ளது அதுதான் ஜனநாயகம்.

ஜனநாயகத்தின் வலிமை என்பதை இந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்கள் விஜய்க்கு பாடம் புகட்டுகின்ற வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர, தாராபுரம் மதுராந்தத்திலும் இரட்டை இலை மலர வேண்டும். துரோகத்திற்கு பாடம் புகட்ட வேண்டும், விசுவாசத்திற்கு மக்கள் இரட்டை இலை வாக்களிக்க தயாராக உள்ளார்கள் . மதுராந்தகம் தாராபுரத்தில் இரட்டை இலை ஆதரவு அலை வீசுவது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என கூறினார்.