கோவையில் பூம்புகார் நிறுவனத்தின் “கொலு பொம்மைகள் கண்காட்சி”: அமைச்சர் சம்பத் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) சார்பில், கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு “கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை” தொடங்குகிறது. அமைச்சர் சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து. கண்காட்சியை பார்வையிட்டனர்.

இக்கண்காட்சி 23.09.2026 முதல் 31.10.2026 வரை, நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பண்பாடு, சமூக வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தசாவதாரம், விநாயகர், அத்தி வரதர், தர்பார், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், கிரிவலம், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, எலி நடனம், வளைகாப்பு, தாயக் கட்டை, உழவர் சந்தை, ஜல்லிக்கட்டு, வெட்டிவேர் விநாயகர், தஞ்சாவூர் உருட்டு பொம்மை, மரப்பாச்சி பொம்மைகள் மற்றும் சமையல் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய கைவினைப் பொருட்களுடன், ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரியின் மரப்பொருட்கள், சன்னப்பட்டணா மற்றும் எட்டிக்கோப்பாக்கா மரப்பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன. ஆண்டாள் தாயம், இராமாயணக் கதை (27 தொகுப்புகள்), ஆதி லெட்சுமி, ஸ்ரீ ராஜ மாதங்கி, மேல் முருகன், ஸ்ரீ வீரமாகாளியம்மன், 60-ஆம் கல்யாணம், பஞ்சாயத்து, கிரகப்பிரவேசம், சுரைக்காய் குடுவை, மதுரை தெப்பக்குளம், குருவாயூர் கோயில் மற்றும் முருகன் தங்கத் தேர் போன்ற சிறப்பு ஃபோம் (Foam) மற்றும் மர பொம்மைகளின் மாதிரிகள் புதிய கவர்ச்சியாக உளளது. பண்டிகைக் காலச் சலுகையாக அனைத்துக் கொலு பொம்மைகளுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்குக் கூடுதல் சேவைக்கட்டணம் எதுவுமின்றி பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மூலம் ரூ. 75.00 லட்சம் மதிப்பிலான விற்பனையை பூம்புகார் நிறுவனம் இலக்காக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




