மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சி முடிந்த பின்பும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிந்த பின்பும் அகற்றாமல் உள்ளது.

மேலும் அருகிலேயே ஜெனக நாராயண பெருமாள் கோவிலும் உள்ளது தற்போது புரட்டாசி மாசம் என்பதால் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் முன்பு உள்ள மிகப்பெரிய பிளக்ஸ் பேனர்களால் பக்தர்களின் கவனம் சிதறும் வாய்ப்பு ஏற்படுவதுடன் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆகையால் பொதுமக்கள் பக்தர்கள் நலன் கருதி மாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் முன்பு உள்ள பேனர்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
