• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

காமராஜர் சத்துணவுத் திட்ட தொடக்க விழாவிற்கு உபகரணங்கள் தயார் செய்ததில் முறைகேடு..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

தமிழக முழுவதும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை காமராஜர் சத்துணவு திட்டம் வருகின்ற 22 ஆம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இதற்கான மையங்கள் அமைத்தல் சமையல் உபகரணங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளது.

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதிகளில் சத்துணவு திட்ட விரிவாக்க பணிகளுக்காக மையங்கள் அமைத்தல் மற்றும் சத்துணவு திட்டத்திற்கான உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா அலங்காநல்லூர் அருகே தேவசேரி முடுவார் பட்டி வெள்ளையம்பட்டி சரந்தாங்கி பாறைப்பட்டி சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சத்துணவு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தேவசேரி மையத்தில் சுமார் 33,000 மதிப்பில் பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட எம்எல்ஏவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது

அதாவது நாலு குண்டுபல்பு ஒரு டியூப் லைட் ஒரு மின்விசிறி என ஆறு பொருட்களுக்கு செலவிடப்பட்ட தொகை ரூபாய் 3000 என குறிப்பிட்டிருந்தது. இதனால் இந்த பணிகளை மேற்கொண்ட பணியாளரை அழைத்து சட்டமன்ற உறுப்பினர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து பணி செய்ய முடியாது என எச்சரித்தார். மேலும் அருகில் இருந்த அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வியிடம் இது குறித்து விவரங்கள் கேட்டறிந்தார் அவரும் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

இதனை தொடர்ந்து முடுவார்பட்டி பகுதியில் சமையல் கூடத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ அங்கும் முறையாக பணிகள் செய்யாத நிலையில் அடுத்து வெள்ளையம்பட்டிக்கு சென்ற போது அங்கு இனிமேல் தான் மையத்தை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் மலுப்பாலாக பதில் கூறினார்கள்.

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சுமார் 19 மையங்களுக்காக 10 லட்சத்திற்கு மேலான தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டதால் அரசின் இந்த திட்டமானது பள்ளி குழந்தைகளுக்கு முறையாக சென்று சேர்வதில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கூறினார்கள் மேலும் இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் திட்டத்திற்கான எந்த ஒரு ஆரம்ப கட்ட வேலைகளும் பல்வேறு பகுதிகளில் செய்யாத நிலையில் எம்எல்ஏவின் இந்த திடீர்ஆய்வால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் இந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் பணியாளர்கள் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால் அலங்காநல்லூர் பகுதிகளில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க பணிகளில் முறையான ஆய்வு செய்து தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறல
ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.