மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், சூலப்புரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் பொதுமக்களை அச்சுறுத்தியும், சிறுவர்களை கடித்து காயங்களை ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,

இந்நிலையில் கிராம பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தொடர்ந்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையளர் சங்கர் கைலாசத்திடம் புகார் மனு அளித்தனர்.,
மேலும் மல்லப்புரம் கிராமம் 7 கிராமங்களை உள்ளடக்கி பெரிய ஊராட்சியாக உள்ளது.,இப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பது இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.,
இப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு தெரு நாய்கள் இரண்டு பசு மாடுகளை கொன்று விட்டதாக கூறப்படுகிறது.,
இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை தெரு நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.,

எனவே நாய்களுக்கு மாவட்ட நிர்வாகம் கருத்தடை மாத்திரை மற்றும் ஊசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.,
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக இப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்ற நாய்களை பிடித்து வந்து சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விடுவதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.,



