விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரி நாயக்கன்பட்டி, மஞ்சள் ஓடைபட்டி ,பாறைபட்டி, புல்ல கவுண்டன்பட்டி ,கொம்மங்கியாபுரம், ஜெகவீரம் பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆரம்ப கட்டமாக உழவு பணி ஏற்கனவே முடிந்த நிலையில் மானாவாரி பயிரான பருத்தி விதை விதைக்கும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

ஆறு மாத பயிர் ஆன பருத்தி 15 நாளுக்கு ஒருமுறை பறிக்கப்படும். தொடர்ந்து ஐந்து முதல் ஆறு முறை அறுவடை செய்யப்படும். சென்ற ஆண்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூபாய் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் வரை விலை கிடைத்ததால் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது. அதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடி தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பூசாரி நாயக்கன்பட்டி விவசாயி சக்கையாக கூறியது
பூசாரி நாயக்கன்பட்டி, பாறைபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் மானாவரி பயிரான பருத்தி மற்றும் சூரியகாந்தி ஆகியவை தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம்.
மழைக்காலம் தாமதமாக தொடங்கியதால் விவசாய பணிகளும் தாமதமாக தொடங்கி உள்ளோம்.சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு பெய்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும். அதன் காரணமாக பருத்தி விலை சென்று ஆண்டை காட்டிலும் குவிண்டாலுக்கு ரூபாய் எட்டாயிரத்திற்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.




