விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் பசும்பொன் மக்கள் தேசம் சார்பில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பசும்பொன் மக்கள் தேசம் கட்சித் தலைவரும் நிறுவனருமான இசக்கி ராஜா தலைமை வகித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முருகவேல் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலா பாண்டியன் வெம்பக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன் உள்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு விஜய கரிசல் குளம் பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது.



