மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கலாம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில்,

மதுரை சாரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) அபினவ்குமார், மாவட்ட எஸ்பி தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மைதானம் மற்றும் அதன் அருகில் உள்ள இரு வாகனங்கள் நிறுத்துமிடம், அதனைத் தொடர்ந்து தி.விலக்கு அருகில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கான இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்க விழா உசிலம்பட்டி நடத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா எனவும், போக்குவரத்திற்கு இடையூர் இல்லாமல் மக்கள் வந்து செல்வதற்கும் எவ்வாறு உள்ளன என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.



