விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி.
இந்த கல்லுாரியில் மாணவியர்களிடையே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மோதிலால் வரவேற்று பேசினார்.
இதில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, பங்கேற்று பாலியல் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் தெரியாத நபர் மீது பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக 1091 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு கல்விதான் அவசியம் பெற்றோர்கள் மகள் படித்து நல்ல நிலையில் வர வேண்டும் என நினைத்து கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர் அதனை மாணவிகள் நன்கு பயன்படுத்தி கல்வி கற்று சிறந்த மனைவியாகவும் சிறந்த மகளாகவும் கல்லூரியில் இருந்து செல்ல வேண்டும்.
காதலில் விழுந்து எதிர்காலத்தை தொலைக்கக் கூடாது படிப்பு தான் பெண்களுக்கு பாதுகாப்பு.
பொது இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டால் பயம் கொள்ளக்கூடாது மாறாக எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆகியன குறித்தும், சிங்க பெண் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் சிங்கப்பெண் படையினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது








