மதுரை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு (Airport Advisory Committee) கூட்டம் நடைபெற்றது. இதில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விமான நிலைய இயக்குநர் முத்துக்கமார், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் கூறுகையில்:

மதுரை ஏர்போர்ட்னுடைய அடுத்தகட்ட வளர்ச்சியில, இந்த புதிய அரசு மிக பெரிய அளவில் வேகமாக, மக்களை பாதிக்காத அளவிலும், அதே நேரத்தில் மக்களுடைய தேவைகளை உணர்ந்தும், மதுரை ஏர்போர்ட்டுக்குள் வளர்ச்சிப் பணிகளை பற்றி ஆய்வு செய்தோம். சில விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மதுரைக்கு புதிய விமானங்கள் வர வேண்டும் என்பதும், அதே நேரத்தில், சில மக்களை பாதிக்காத அளவில் இந்த திட்டத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றியும் பேசுவோம்.
நிலம் கையகப்படுத்தல் பணி 97% நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்; அதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சியில மாநில அரசு தன்னுடைய பங்காக, பஸ் பெசிலிட்டிஸ் உருவாக்குறதா இருந்தாலும் சரி, மற்றும் சுற்றுலாத் துறையினுடைய வளர்ச்சியா இருந்தாலும் சரி, அது அனைத்தையும் அமைச்சர் முதல்முறையாக இந்த குழுவுல இருக்கிறதுனால, மதுரை விமான நிலையத்தினுடைய குழுவுல பல ஆண்டுகளுக்கு பின்னால—ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு அமைச்சர் இந்த குழுவுல இருக்கிறார் என்பதால் இந்த வளர்ச்சி பணி வேகப்படும்.
இது ஒரு நிறைவைத் தருகிறது.
மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சிப் பணிகள் சரியான திசையில் போக ஆரம்பிச்சிருக்கு. அதே மாதிரி, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்ள மதுரையினுடைய புதிய ரிங் ரோடு அமைப்பதற்கான பணி முடிவடையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதற்கு பிறகு தான் மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் நடக்கும். ஆக மொத்தம், இது ஏறக்குறைய இன்னும் ஒரு இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் எல்லாம் ஒரு நிலைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கு.
சர்வதேச விமானங்கள் வந்து ரத்து செய்யப்பட்டிருக்குதா? சர்வதேச விமான நிலையமா அறிவிக்கப்பட்டதுக்கு அப்புறம், இரண்டு மூணு விமானங்கள்… சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயர் இருக்கு, அதே மாதிரி துபாய்… ரத்து செய்யப்பட்டிருக்கு குறித்த கேள்விக்கு:
ரெண்டுக்குமே வேற வேற காரணங்கள். முதலில் துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் ஓட பிரச்சனை, அந்த கம்பெனியோட பிரச்சனை. எல்லாமே லாபத்துக்காக வர்ற ஏர்லைன்ஸ். ஏர்லைன்ஸ் யாருமே ஃப்ரீயா நடத்தல.
ஏர் இந்தியா முதல்ல வந்து கவர்மெண்ட் நடத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு ஆர்கனைசேஷனா இருக்கும் போது, அது வந்து நஷ்டத்துக்கு ஏற்படுத்தலாம், மக்களுடைய நலனுக்காக கொண்டு வரலாம். ஆனா இப்ப லாபத்துக்காகத்தான் எல்லா நிறுவனங்களும் வரப்போகுது. இதுல ஸ்பைஸ்ஜெட் அவர்களின் பிரச்சனைகளுக்காக துபாயில் சர்வீஸை கட் பண்ணிட்டாங்க.

சிங்கப்பூர் போன கூட்டத்துக்கு முன்னாடியே நாங்க போய் பார்த்தோம். நானும் எம்.பி.யும் போய் பார்த்தோம். அவங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸினுடைய நிர்வாகிகளை… எம்.டி.யை போய் சென்னை, டெல்லியில பார்த்தோம். அப்பொழுது அவர்கள் சொன்னது, அவர்களுடைய டைம் ஸ்லாட்ஸ் சேஞ்ச் பண்ணதுனால மிக பெரிய அளவுல அதுல பேசஞ்சர் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. அதை திருச்சிக்கு மாத்திட்டாங்க.
இப்ப திருப்பியும் போய் நாங்க ஏர் இந்தியா, மிக அதிர்ச்சியா இருந்தது என்னவென்றால், ஏர் இந்தியாவினுடைய express வர்ற ஃபிளைட்டை நிப்பாட்டிட்டு, ஏர் எக்ஸ்பிரஸா மாத்திட்டாங்க. இதெல்லாம் அரசாங்க நிலையில இருக்கும் போது இதெல்லாம் மாத்த விடாம ஆக்கலாம்.
இப்ப வந்து பிரைவேட் கம்பெனிங்கிறதுனால நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. நம்ம போய் கோரிக்கைதான் வைக்க முடியும். அவங்ககிட்ட சொல்ல முடியும் மார்க்கெட் இருக்குங்கிறதை. அதை இந்தத் தடவை மீண்டும் நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போய் ஏர் இந்தியாவினுடைய நிர்வாகத்தை சந்தித்து பேசுவோம்.
திருப்பரங்குன்றம் தொகுதி வந்து எய்ம்ஸும் கனவாவே இருக்கு, மதுரை விமான நிலைய விரிவாக்கமும் நீண்ட கனவாவே இருக்கு. அது எப்போது நடைமுறைக்கு வரும்
அமைச்சர் வந்துட்டாருல்ல, அதனால இனிமே கனவு நனவாயிரும்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் போராடிக்கிட்டேதான் இருக்கோம். இப்ப உங்க எல்லாருக்கும் தெரியும், எய்ம்ஸைப் பொறுத்தவரைக்கும் 80% எப்பவோ முடிச்சிட்டாங்க. 2022-லேயே முடிச்சிட்டாங்க. எய்ம்ஸினுடைய 80% நட்டா வந்து அனவுன்ஸ் பண்ணாரு. இப்பதான் 80% வந்துருக்காம், 85% முடிஞ்சிருக்கு. எய்ம்ஸையும் போய் ஒரு தடவை நடுவுல ஆய்வு செஞ்சு, அமைச்சரோட சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களோட போய் பார்த்து அதையும் அப்டேட் பண்ணுவோம்.
எங்களைப் பொறுத்தமட்டிலும் எய்ம்ஸும் சரி, மதுரை ஏர்போர்ட்டும் சரி மிக முக்கியமானது இந்த திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய வளர்ச்சியில. அதே மாதிரி மதுரையினுடைய, தென் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில இது ரெண்டும் பெரிய மைல்ஸ்டோன். இது இரண்டையும் நிறைவேற்ற வைக்க வேண்டியது எங்க எல்லாரோட கடமை.”

இந்த மீட்டிங்ல வந்து பிசினஸ் பீப்பிள்ஸ் யாராவது கலந்துகிட்டாங்களா? ஏன்னா இங்க கார்கோ மூலமா இம்போர்ட், எக்ஸ்போர்ட் வந்து அவங்கதான் ரொம்ப பெரிய அளவுல எதிர்பார்த்தாங்க இன்டர்நேஷனல் அந்தஸ்து வந்தா. அவங்ககிட்ட எதுவும் மீட்டிங்ல கன்சல்ட் பேசினாங்களா
எல்லாருக்கும் மெம்பர் புதுசா மெம்பர்ஷிப் போட்டிருக்கோம். மெம்பர்ஸ் ஆட் பண்ணிருக்கோம். சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து ஜெகதீசன் அதுல அதனுடைய பிரதிநிதியா இருக்காரு. விருதுநகர் சேம்பர்ல இருந்து ஸ்ரீராம் ராஜா சார் இருக்காரு.
இந்த முறை போன வருடங்களை விட இந்தத் தடவை கார்கோவினுடைய நம்பர்ஸ் வந்து கூடியிருக்கு. மத்த எல்லாத்துலயும் பேசஞ்சர்ஸோட நம்பர் குறைஞ்சிருக்கு. ஏன் கேட்டீங்கன்னா ஏ.டி.ஆர். ஃபிளைட் குறைஞ்சதுனால, பெரிய ஃபிளைட்ஸ் வந்ததுனாலயும்… பெரிய கேப் இருக்கு, அதனால அதை வந்து ஒரு 10,000 பேசஞ்சர்ஸோட இந்தத் தடவை ஃபுட்பால் வந்து குறைஞ்சிருக்கு.
விரிவாக்கத்திற்காக இந்த ரோடும் மாற்றி அமைக்கப்படுமா? இல்ல அண்டர்கிரவுண்ட் பாஸ் மாதிரி போகுதா
அதைத்தான் நான் சொன்னேன். புதிய ரிங் ரோடு அமைக்கின்ற பணி இன்னும் ரெண்டு வருஷத்துல கம்ப்ளீட் பண்ணிருவோம். அதனால ரோடுதான் அமைக்கப்போறாங்க… ரிங் ரோடுதான் அமைக்கப்போறாங்க.
கம்பிகுடி கால்வாய்… அதை மாற்றும் திட்டத்துல கொண்டு வந்திருக்கீங்களா? அந்த புராஜெக்ட் இதுல இல்லையா
எல்லாமே ஒரு நிலைக்கு வந்துகிட்டு இருக்கு. இப்ப அமைச்சர் வந்திருக்கிறதுனால அது எல்லாத்தையும் கொஞ்சம் ஃபாஸ்ட் பண்ணி, மக்களை பாதிக்காத அளவுல அதை கொண்டு வருவதற்காக அமைச்சர் இருக்காரு.
பணிகள் எப்போது தொடங்கும் சார்
இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள அந்த ரிங் ரோடு முடிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. அதற்கான கொஞ்சம் பொறுமையா இருக்கணும் நம்ம. இப்பதான் கொஞ்சம் ஸ்ட்ரக்ச்சருக்கு வந்துருக்கு. அதனால நம்ம எல்லாரோட முயற்சியால அது நல்லபடியா நடக்கும்.

சின்ன உடைப்பு மக்கள் வந்து தொடர்ந்து போராட்டம்… அவங்க சொந்தக்காரங்களுக்குலாம், அதாவது அங்க உறவினர்களுக்கு பட்டா கேட்கிற பிரச்சனை நடந்துட்டு இருக்கு. இப்ப மாவட்ட நிர்வாகமும் கொடுக்குறாங்க, இப்ப நம்ம அதை எந்த அளவுக்கு சீக்கிரம் வந்து அவங்களை அங்கிருந்து வெளியேற்றுற முயற்சிகள் இருக்கு?
சின்ன உடைப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே மக்கள்ட்ட பேசி அவங்களே ஒரு சில இடத்துல இடம் கேட்டுருக்காங்க. அதை ஆய்வு செஞ்சு அதுக்கு தேவையான. அந்த இடத்தை மாற்றாக கொடுப்பதற்கான ஆய்வு செய்யப்படுகிறது. ரொம்ப சீக்கிரம் சுமுகமா முடிந்து விடும் என கூறினார்.








