• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஊர் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம்..,

Byp Kumar

Sep 16, 2026

திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆனது நடைபெறும்.

இந்த ஊர்வலமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 ஆண்டுகாலமாக குடை பாறை பட்டியிலிருந்து புறப்பட்டு செல்லும் விநாயகர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை கடக்கும் பொழுது, மேளதாளங்கள் இன்றி அமைதியான முறையில் பள்ளிவாசலை கலந்து வேண்டுமென இஸ்லாமிய சமூக மக்கள் கோரிக்கைகள் வைக்க, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இந்த வழியில் நாங்கள் மேளதாளங்கள் முழங்க செல்ல வேண்டும் என இரு தரப்பினருக்கு இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் 15 ஆண்டு காலமாக திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலை விநாயகர் ஊர்வலம் செல்லும் பொழுது மேளதாளங்கள் இசைக்கக்கூடிய இசைக்கருவிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து கொள்வர். மீண்டும் பெரிய பள்ளிவாசலை கடந்து யானை தப்பும் செல்லும் பொழுது மீண்டும் இசைக்கருவிகள் இசைக்க இசை வாத்தியங்கள் மீண்டும் இசைக்கலைஞர்களுடன் வழங்கப்படும்.

இதனால் இப்பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையே பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பெரிய பள்ளிவாசல், பேகம்பூர், கொடை பாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

இந்த ஆண்டும் குடை பாறைப்பட்டியில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலமானது தாரை தப்பட்டைகள் முழங்க விநாயகர் பஜனைகள் பாடி ஊர்வலமானது பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை கடக்கும் பொழுது அமைதியான முறையில் மேளதாளங்கள் இசைக்காமல் பஜனைகள் மட்டும் பாடிக்கொண்டு ஊர்வலமானது கடந்து சென்றது.