• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணா பிறந்தநாள் விழா த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க.,அ.தி.மு.க., தமிழக வெற்றி கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழாவை யொட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புவழங் கி கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட பொரு ளாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, வழக் கறிஞர் தியாக ராஜன்,பேரூர் செயலா ளர் பசுமணி யன்,கொரியர் கணேசன், உள்பட பேரூர், ஒன்றிய ,தொகுதி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் தொகுதி தி.மு.க., சார்பாக மாவட்ட கழக துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் பேரூர் செயலா ளர்கள் பேரூ ராட்சி தலைவர் மு. பால் பாண்டி, சத்ய பிரகாஷ், ஒன்றிய செய லாள ர்கள் பால.ராஜேந்திரன், பசும் பொன் மாறன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி,பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக்,பேரூர் துணைச் செயலாளர் ஜெயகாந்தன், நிர்வாகிகள் ராம் மோகன்,எம்.எஸ். முரளி, அரவிந்தன், வினோத் உள்பட பேரூர் ஒன்றிய தொகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேரூர் அ.தி.மு.க., சார்பாக நடந்த விழாவில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி திருஉருவ படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கினார்.

இதில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்.எல். ஏ., நீதிபதி,பேரூர் செயலாளர் அசோக் குமார்,ஒன்றிய செயலாளர்கள் ரவிச் சந்திரன், காளிதாஸ், மலையாளம், மணி,மகளிரணி மாவட்டச் செயலாளர் லட்சுமி, குட்லாடம்பட்டி ராஜேந்திரன், வேல்முருகன் உட்படஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.